4 August 2012

allaH


“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”


“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”


“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”


“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”

"ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு"

சுபஹ் தொழுகையில் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் ஓதப்படும் குனூத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது ரமழான் பதினைந்தின் பின்பு அதனை வித்ரு தொழுகையின் இறுதியிலும் இமாம் ஓத, பின் நிற்பவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் மாத்திரம் இடம் பெறுவதை நாம் அறிவோம். இதன் உண்மை நிலைபற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு பற்றிய அவர்களின் மூல நூற்களில் இருந்து இங்கு எடுத்து எழுதுகின்றோம்.

நாம் இதனை எழுதி மாத்திரத்தில் இவர்கள் இப்படித்தான், அமல்களைக் குறைப்பவர்கள், அப்படித்தான் எழுதுவார்கள், வஹ்ஹாபிகள், குழப்பவாதிகள் என்று எம்மீது சீறிப்பாய்வதையும், எமெக்கிதிராக அவதூறுகள் பரப்புவதையும், பொதுமக்களைத் திசை திருப்பி சத்தியத்தை மறைப்பதையும் ஆலிம்கள் எனக் கூறிக் கொள்வோர் தவிர்த்து, ரமழானில் அரைப்பகுதியில் தாம் ஓதும் குனூத் ஆதாரபூர்வமானதா? அல்லது ஆதாரமற்ற சுபஹ் குனூத் போன்றதா? என சிந்தித்து செயலாற்றும்படி முதலில் வேண்டிக் கொள்கின்றோம்.

குனூத் இடம் பெறும் நூல்களும் அறிஞர்களின் விமர்சனங்களும்
ஹதீஸ்கலை அறிஞர்களான அபூதாவூத். பைஹகி, இப்னு அபீஷைபா, இப்னுல் அதீர் போன்றோர் தமது நூற்களில் இதனைப் பதிவு செய்துள்ளனர்.

இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் சுனனில் (அவர்களின் ஹதீஸ் நூலில்) வித்ர் குனூத் பற்றி ஒரு ஹதீஸை அறிவித்த பின் மற்றொமொரு செய்தியை பின்வருமாறு அறிவிக்கிறார்கள். அதாவது உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் உபை பின் கஃப் (ரழி) அவர்களின் தலைமையில் (ரமழானில்) மக்களை ஒன்று சேர்த்திருந்தார்கள். அவர் அவர்களுக்கு இருபது இரவுகள் தொழுகை நடத்தினார். மிஞ்சிய அரைவாசியில் குனூத் ஓதுவார்…’ என ஹஸன் அல்பஸரி என்பவர் உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கும் செய்திகள் பற்றி விpமர்சிக்கும் இமாம் அபூதாவூத் அவர்கள் ‘ 

قَالَ أَبُو دَاوُد: وَهَذَا يَدُلُّ عَلَى أَنَّ الَّذِي ذُكِرَ فِي الْقُنُوتِ لَيْسَ بِشَيْءٍ وَهَذَانِ الْحَدِيثَانِ يَدُلَّانِ عَلَى ضَعْفِ حَدِيثِ أُبَيٍّ… ( سنن أبي داود) 

குனூத் பற்றிக்கூறப்படும் இந்தச் செய்தி ஒன்றுக்கும் உதவாதது. இந்த இரு செய்திகளும் உபை பின் கஃப் (ரழி) அவர்களின் செய்தி பலவீனமானது என்பதைக் காட்டுகின்றது. (பார்க்க: சுனன் அபீதாவூத்) மேற்படி செய்தியை அபூதாவூத் இமாம் வழியாக பைஹகி அவர்கள் அறிவித்துள்ளார்கள். 

மேற்படி செய்தியில் காணப்படும் குறைகள்
மேற்படி செய்தியில் இடம் பெறும் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ‘ஹஸனுல் பஸரி’ என்பவர் உமர் (ரழி) அவர்களை சந்திக்காதவர். உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் இறுதி இரண்டு வருட காலத்தில் பிறந்தவர். உமர் (ரழி) அவர்களை சந்திக்காதவர். இப்படிப்படிப்பட்ட ஒருவரால் இந்தச் செய்தி கூறப்படுவதை அறிஞர்கள் ‘முன்கதிஃ’ அறிவிப்பாளர் தொடர்பு அறுந்த நிலை என வர்ணிப்பதுடன், அந்த அறிவிப்பையும் தள்ளுபடி செய்வர் என்பதையும் கருத்தில் கொண்டால் இது தள்ளுபடி செய்யப்பட வேண்டிய, சட்டம் எடுக்க முடியாத அறிவிப்பு என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

மேற்படி செய்தியை விமர்சிக்கும் இமாம்கள்
இந்தச் செய்தி ஒன்றுமல்ல, அது பலவீனமானது என இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் ஏற்கெனவே கூறியுள்ளதை மேலே எழுதியுள்ளோம். இமாம் ஸைலயி என்பவர் ஹனபி மத்ஹப் சார்ந்த நூலான ‘அல்ஹிதாயா’ என்ற நூலில் இடம் பெறும் ஹதீஸ்களை திறனாய்விற்கு உட்படுத்தி ‘நஸபுர்ராயா’ என்ற நூலை எழுதியுள்ளார்கள். ரமழான் அரைவாசியில் ஓதப்படும் குனூத் பற்றிக் குறிப்பிடும்போது ‘ அது பற்றி இரண்டு ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன எனக் கூறிவிட்டு, இமாம் அபூதாவூத் அவர்களின் கிரந்தத்தில் இடம் பெறும் மேற்படி ஹதீஸை முதலாவது ஹதீஸாக எடுத்தெழுதிய பின்னர் ‘;

وَهَذَا مُنْقَطِعٌ ، فَإِنَّ الْحَسَنَ لَمْ يُدْرِكْ عُمَرَ …. ( نصب الراية في تخريج أحاديث الهداية – ج 3 ص 175)

இது ‘முன்கதிஃ’ அறிவிப்பாளர் தொடர்பு அறுந்த நிலையாகும். ஏனெனில் ஹஸன் என்பவர் உமர் (ரழி) அவர்களை சந்திக்கவில்லை எனக் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: நஸபுர்ராயா, பாகம்: 3.பக்கம். 175) (இலத்திரனியல் நூலகம். இரண்டாம் வெளியீடு.) மேலும் மற்றொரு அறிவிப்பு அபூதாவூதில் இடம் பெறுகின்றது. அதில் وَفِيهِ مَجْهُولٌ ‘அதில் விலாசமற்ற, யார் என்று அறியப்படாதவர் இடம்பெறுகிறார்’ என அதே நூலில் விமர்சித்த பின்னர்,

وَقَالَ النَّوَوِيُّ فِي ‘ الْخُلَاصَةِ ‘ : الطَّرِيقَانِ ضَعِيفَانِ ‘ அல்ஹுலாஸா’ என்ற நூலில் இமாம் நவவி அவர்கள் ‘ இவ்விரண்டு வழிகளும் பலவீனமானவையே’ எனக் கூறியுள்ளதாகக் கூறுகிறார்கள்.

‘நபி (ஸல்) அவர்கள் ரமழானின் அரைவாசியில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்’ என அபூஆதிகா எனப்படும் தரீப் பின் சுலைமான் என்பவர் அனஸ் (ரழி) அவர்கள் வழியாக அறிவிக்கும் செய்தியை இரண்டாவது ஹதீஸாகக் குறிப்பிடும் அதே இமாம் ஸைலயி அவர்கள் இதனை இப்னு அதிய் அவர்கள் தனது ‘அல்காமில்’ என்ற (பலவீனமான அறிவிப்பாளர்கள் பற்றி குறிப்பிடும்) நூலில் குறிப்பிடுவதாகக் கூறிய பின்

وَأَبُو عَاتِكَةَ ضَعِيفٌ ، قَالَ الْبَيْهَقِيُّ : هَذَا حَدِيثٌ لَا يَصِحُّ إسْنَادُهُ . ‘அபூ ஆதிகா பலவீனமானவர்’ எனத் தீர்ப்பை முன்வைப்பதோடு, இது அறிவிப்பாளர் தொடர் சரியில்லாத ஹதீஸ்’ என இமாம் பைஹகி (ரஹ்) அவர்கள் கூறியதாகவும் குறிப்பிடுகிறார்கள்.(பார்க்க: நஸபுர்ராயா, பாகம்: 3.பக்கம். 175) 

இந்தச் செய்தி பற்றி விபரிக்கும் ‘அபூதாவூதின் விரிவுரை அறிஞரான அல்முபாரக்பூரி என்பவர், மேற்செய்தியானது ‘அறிவிக்கப்படுகின்றது’ என்ற மறைமுகமான, சந்தேகத்திற்கு இடம்பாடான சொற்றடரைக் கொண்ட ஒரு செய்தியாகவே அறிவிக்கப்படுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளதையும் இதன் பலவீனத்தின் காரணிகளில் முக்கியமான காரணியாக இங்கு கவனித்தில் கொள்ளவும் வேண்டும். (அவ்னுல் மஃபூத் ஷரஹ் சுனன் அபூதாவூத். பாகம்: 3: பக்கம், 360) (இலத்திரனியல் நூலகம். இரண்டாம் வெளியீடு.) 

குறிப்பு: அறிவிக்கப்படுகிறது, சொல்லப்படுகிறது போன்ற அமைப்பை ஹதீஸ் கலை அறிஞர்கள் ‘ஸீகதுத் தம்ரீழ்) நோய், பலவீனம் சார்ந்த அமைப்பு என வர்ணிப்பர். குறித்த ஹதீஸை ஏற்கமுடியாது என்பதற்கான காரணிகளில் இதுவும் உள்ளடக்கப்படும் என்பதைக் கவனித்தில் கொள்ளவும்.

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”

"அல்லாஹ்வையும் தூதரையும்"

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசித்தல் இன்றைக்கு அதிகமானவர்கள் வழி தவறுவதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்ன இந்த கட்டளையை மறந்ததே காரணம். வரதட்சணை வாங்கி திருமணம் முடிக்கும் ஆண்கள், பெற்றோரைக் காரணம் காட்டி இந்தப் பாவத்தைச் செய்கிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்யும் காரியம் இது என்று அவர்களிடம் சொன்னால் பெற்றோர்களை எதிர்க்க முடியாது என்று கூறி விடுகிறார்கள். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட இவர்கள் பெற்றோர்க்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

மேலும், இவர்கள் ஒரு பெண்ணை விரும்பும் போது மட்டும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்கிறார்கள். ஒரு பெண்ணின் மீது வைத்திருக்கும் பிரியத்தைக்கூட அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் கொண்டிருக்கவில்லை என்பதை இதன் மூலம் தெளிவுப்படுத்துகிறார்கள். இதே போன்று வியாபாரத்தில் கலப்படம் செய்பவர்கள், அடுத்தவர் பொருளை அபகரிப்பவர்கள், இன்ன பிற பாவங்களைச் செய்பவர்கள் அணைவருமே நபி(ஸல்) அவர்களது கட்டளையைத் துணிச்சலாக அலட்சியம் செய்வதால் தான் இந்த பாவங்களை செய்கிறார்கள். இன்னும் சிலர் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மனைவி, மக்கள் ஆகியோருக்காக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் புறக்கணிக்கின்றனர். இவர்களை அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரிக்கிறான்.

உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துனைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவனது பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான் என்று கூறுவீராக! (ஸூரத்துல் பகரா,9:24).

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்து விட்டால் நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்னுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (ஸூரத்துல் அஹ்ஜாப்,33:36).

(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். ஸூரத்துல்ஆல இ…ம்ரான்,3:3

முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக… நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான். ஸூரத்துல் மாயிதா,5:54.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார்.

(அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.

2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது. அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி

எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும் அவரது மக்களையும் விட நான் மிக்க அன்பானவராக ஆகும்வரை அவர் (உண்மையான) ஈமான் கொண்டவராக மாடடார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர், அபூஹுரைரா (ரலி) நூல்-புகாரி,) 7485.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று கூறுவான். அவ்வாறே ஜிப்ரீல்(அலை) …அவர்கள் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல்(அலை) அவர்கள் வானத்தில் ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று குரல் கொடுப்பார்கள். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். மண்ணகத்தாரிடையேயும் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘செயல்களில் சிறந்தது எது?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, ‘அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது’ என்றார்கள். ‘பின்னர் எது?’ என வினவப்பட்டதற்கு, ‘இறைவழியில் போரிடுதல்’ என்றார்கள். ‘பின்னர் எது?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘அங்கீகரிக்கப்படும் ஹஜ்’ என்றார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :2 2:207.

இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.

அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடத்தில் அமர்ந்திருந்தார். அவரை ஒருவர் கடந்து சென்றபோது நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதரை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்……. “”இதை நீ அவருக்கு அறிவித்து வீட்டீரா?” அவர் “இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள் “(உமது நேசத்தை) அவரிடம் அறிவித்து விடும்” என்றார்கள். அவர் தனது நண்பரிடம் சென்று, “நான் அல்லாஹ்வுக்காக உம்மை நேசிக்கிறேன்” என்றார். அம்மனிதர்” அல்லாஹ்வுக்காக என்னை நீர் நேசித்தீர், அல்லாஹ்வும் உம்மை நேசிக்கட்டும்” என்று கூறினார். (ஸுனன் அபூதாவூது)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹுத்தஆலா படைப்பினங்களை படைக்க முடிவு செய்தபோது தன் வசமுள்ள ஏட்டில் என்னுடைய கருணை என்னுடைய கோபத்தை மிகைத்துவிடும் (என்று) தன் மீது கடைமையாக்கி எழுதி தன் வசம் வைத்துக்கொண்டான். (நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா)

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”


“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”

"சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்"

அல்லாஹ் இம்மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக்குர்ஆனை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குர்ஆனைப் படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்யுங்கள் அது உங்களுக்கு மறுமையில் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்றும் குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் குர்ஆனை ஓதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கண்ணியமான உயர்ந்த மலக்குகளுடன் மறுமையில் இருப்பார்கள். இப்படி குர்ஆனை ஓதுவது பற்றிய நன்மைகளை நாம் அதிகம் தெரிந்திருக்கின்றோம். அதனால் குர்அனை தஜ்வீத் முறைப்படி பல தடவைகள் ஓதி முடித்தும் இருக்கின்றோம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.ஆனால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கம் இது மட்டுமல்ல, குர்ஆனை அரபு மொழியில் ஓதுவதோடு அதன் கருத்துக்களையும் உணர்ந்து, படித்து, தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். அரபு மொழி தெரியாதவர்கள் தனக்குத் தெரிந்த மொழியாக்கம் செய்யப்பட்ட குர்ஆனை, மனம் அமைதிபெறும் நேரத்தில் எடுத்து, அதிலுள்ள சில வசனங்களையாவது கருத்துணர்ந்து தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்த்து படிக்க வேண்டும். சிந்திக்கச் சொல்லும் வசனத்தைக் கண்டால் சிந்திக்க வேண்டும், அல்லாஹ்வின் தண்டனை பற்றிய வசனத்தைக் கண்டால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்க வேண்டும். அல்லாஹ்வின் கண்ணியம் பற்றிய வசனம் வந்தால் அல்லாஹ்வை துதிக்க வேண்டும். அல்லாஹ்வின் அருள் மற்றும் சுவர்க்கம் பற்றி கூறப்பட்டால் அல்லாஹ்விடம் அதைக் கேட்க வேண்டும். இவ்வாறுதான் குர்ஆனை நாம் அணுக வேண்டும். இவ்வாறில்லாமல் அவசர அவசரமாக கருத்துணராமல் அரபியில் மட்டும் அல்லது மொழியாக்கத்தை வேகம் வேகமாக படித்து முடிப்பதினால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கத்தை நாம் முழுமைப்படுத்த முடியாது. இதனால்தான் குர்ஆனை ஓதிக்கொண்டே குர்ஆனுக்கு மாறு செய்கின்றோம். குர்ஆனை ஓதிக் கொண்டே வட்டி கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் அதிகம் இருக்கின்றார்கள். இவ்வாறே கொலை, கொள்ளை, விபச்சாரம், ஏமாற்று என்று மாபாவச் செயல்களை செய்யக்கூடியவர்கள் நம்மில் அதிகரிக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் அனைவரும் நாள்தோறும் குர்ஆனை ஓதக்கூடியவர்கள் தான். குர்ஆனை ஓதியும் இவர்கள் இம்மாபாவச் செயல்களை விடாமலிருப்பதற்குக் காரணம், குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கவில்லை என்ற ஒரே காரணம்தான். குர்ஆனை கருத்துணர்ந்து, நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் நாம் திருந்த முடியும் இன்ஷா அல்லாஹ். கருத்துணர்ந்து குர்ஆனை படிக்க வேண்டும் என்கிற வசனங்களையும், நபிமொழிகளையும் இனி தெரிந்து கொள்வோம்.

இறை வாக்குகள் 

1. (நபியே! குர்ஆனாகிய இது) பாக்கியமிக்க வேதமாகும், இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் நாம் இதை உம்மீது இறக்கிவைத்தோம். (அல்குர்ஆன் 38:29) குர்ஆனை ஓதுவதால் அதிக நன்மை இருக்கின்றது என்பதில் கொஞ்சம்கூட ஐயமில்லை, அப்படி இருந்தும் இப்புனிதமிக்க குர்ஆன் இறக்கிவைக்கப்பட்ட அடிப்படை நோக்கம், சிந்திப்பதற்கேயன்றி வெறும் கருத்துணராமல் ஓதுவதற்கு மாத்திரமல்ல என்பதை மேலுள்ள திருவசனம் சுட்டிக்காட்டுகின்றது. ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனின் சட்டதிட்டங்களை பாழ்படுத்திவிட்டு அதன் எழுத்துக்களை மாத்திரம் மனனம் செய்வது குர்ஆனை சிந்திப்பதாகாது. கருத்துணராமல் குர்ஆனை ஓதக்கூடியவர்களில் ஒருவர், நான் குர்ஆன் முழுக்க ஓதிவிட்டேன் எனக்கூறுகின்றார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் அதில் கூறப்படும் நல்லொழுக்கங்களோ, அமல்களோ காணப்படவில்லை!.

2. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82) இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: அல்லாஹ் தன் அடியார்களை இக்குர்ஆனை சிந்திக்கும்படியும் அதன் தீர்க்கமான கருத்துக்களையும் இலக்கிய வசன நடைகளையும் உணராமல் அதை புறக்கணிப்பதையும் அல்லாஹ் தடுக்கிறான். இது குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கும்படி ஏவப்பட்ட தெளிவான ஏவலாகும்.

3. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24) 

4. நாம் யாருக்கு வேதத்தை கொடுத்தோமோ அத்தகையோர் – அவர்கள், அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள்தான் இதை (அல்லாஹ்வின் வேதமென) விசுவாசிப்பார்கள். மேலும் (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ, அத்தகையோர் தாம் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 2:121) இந்த வசனத்திற்கு இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தை குறிப்பிடுகின்றார்கள்: (என் உயிர் எவனிடம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக! குர்ஆனை ஓதவேண்டிய முறைப்படி என்பது, அது ஹலாலாக்கியதை ஹலாலாக்குவதும், அது ஹராமாக்கியதை ஹராமாக்குவதும் அல்லாஹ் இறக்கிய முறைப்படி ஓதுவதுமாகும்.) ஷஃகானி(ரஹ்) அவர்கள்: (அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள்) என்ற வார்த்தைக்கு விளக்கமளிக்கும்போது, (அதில் உள்ளதைக் கொண்டு அமல் செய்வார்கள்) என்பதுதான் அதன் விளக்கமாகும். ஆகவே அமல் அறிவுக்குப் பிறகுதான் ஏற்படும். அறிவு சிந்திப்புக்கு பின்புதான் ஏற்படும் என்கிறார்கள்.

அல்குர்ஆன் 6:125

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். 

ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள். 

இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறைவாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்.

3 August 2012



                                                                   

.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு

யா அல்லாஹ்! நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் உன்னைத் தவிர வேறு யாரும் நேர்வழி காட்டமுடியாதே, அத்தகைய நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் எனக்கு நீ நேர்வழி காட்டுவாயாக! கெட்ட அமல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்து உன்னைத்தவிர (வேறு) யாரும் என்னை பாதுகாக்க முடியாதே, அத்தகைய கெட்ட செயல்கள்; மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னை (தடுத்து) பாதுகாப்பாயாக! .....

Posted by Mohamed NayeeM