12 June 2012

புறம் பேசாதீர்கள்

"புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?" என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, "அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்" என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’" என்றார்கள். "நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள்